நம்மை பற்றி
பண்டாரவாடை – வளைகுடா வாழ் நண்பர்களால் ஐக்கிய அரபு அமீரகம் -துபாய் மண்டலத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு, பண்டாரவாடை சகோதரர்களை ஒருங்கினைத்து ஒற்றுமையோடு செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு எவ்வித இயக்கத்திற்கும் சார்ந்ததல்ல. இந்த அமைப்பில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமானால் எவ்வித நிபந்தனையும், குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
பண்டாரவாடையில் பிறந்து வளர்ந்தவராகவோ, அல்லது குடிபெயர்ந்தவரகவோ இருத்தல் வேண்டும்.
மேலும், இந்த அமைப்பு தனிப்பட்ட முடிவுகளை எடுக்காது, முழுக்க முழுக்க பண்டாரவாடை – வளைகுடா வாழ் நண்பர்களின் ஆலோசனை பெற்று நிர்வாகிகள் செயல்படுத்துவார்கள். பண்டாரவாடை வளர்ச்சிக்கு அமைப்போடு உறுதுணையாய் நின்று செயலாற்ற வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
திட்டங்களும்–நோக்களும்
1. மருத்துவ சேவை :
நமதூர் மக்களிடத்தில் நோய்களைப்பற்றி விழுப்புணர்வு பெற சிறந்த மருத்துவர்களை கொண்டு சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றிட உள்ளோம்.
•கண் பரிசோதனை முகாம்.
•சர்க்கரை நோய்-நிரழிவு நோய் பரிசோதனை முகாம்.
•பருவங்களில் ஏற்படும் நோய் பற்றி விழுப்புணர்வு.
•இரத்ததான முகாம்.
•சுற்று சுழல் சுகாதார விழுப்புணர்வு முகாம்.
2. மார்க்க கல்வி – உலக கல்வி விழுப்புணர்வு :
நமதூர் மக்களிடத்தில் மார்க்க பிரச்சார சொற்பொழிவு, பெண்களுக்கான மார்க்க சமந்தப்பட்ட பிரச்சார சொற்பொழிவு ,குரான் மற்றும் ஹதீஸ் சொற்பொழிவுகள் போன்ற திட்டகளுக்கும், உலக கல்வி சமந்தமான மேற்படிப்பு ஆலோசனைக்கும் வேலைவாய்ப்பு தகவல் மற்றும் ஆலோசனைக்கும் மற்றும் சட்ட உரிமைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
3. கல்வி உதவிகள் :
•நமதூர் மாணவ மாணவிகள் பலர் தகுதி இருந்தும் படிக்க வசதியற்றவர்களுக்கு நிதி உதவி அளிப்பது.
•மேற்படிப்பிற்கு சிறந்த ஆசிரியர்கள். கல்வியாளர்களை கொண்டும் கலந்துரையாடல், கல்வி வழிகாட்டி முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகள் பெற்றோர்களுக்கும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
4. ஆங்கில கல்வி :
நமதூரில் படித்துகொண்டு இருக்கும் மாணவர்களுக்கு. படித்து முடித்து வேலை தேடிக் கொண்டுருக்கும் நண்பர்களுக்கும் ஆங்கில புலமையை மேம்படுத்தும் விதமாக சிறந்த ஆங்கில புலமை உள்ள ஆசிரியர்களை கொண்டு ஆங்கில பயிற்சி அளிப்பது.
5. வேலைவாய்ப்பு :
நமதூரில் இருந்து வேலை தேடி வளைகுடா வரும் நண்பர்களுக்கு உதவும் விதமாக குரூப் இ -மெயில் மூலம் அணைத்து நமதூர் நண்பர்களுக்கும் தெரியபடுத்தி தகுதியான வேலை கிடைக்க முயற்சி செய்வது.
6. பசுமை திட்டம் :
சுற்று சுழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரம் மற்றும் கிராமத்தை பசுமையான சுழலை ஏற்படுத்துவது.
மேற்கண்ட நற்பணிகள் வளைகுடா வாழ் பண்டாரவாடை நண்பர்களால் தீர்மானிக்கபட்டது . நம் ஊர் வளர்ச்சிக்கு சேவையாற்ற இந்த வாய்ப்பை வழங்கிய வல்ல இறைவனுக்கு நன்றி-ஐ செலுத்துவோம்.மேலும் நம் ஊர் சகோதரர்களுக்கும் இந்த ஹிதாயத் கிடைக்க இறைவனிடம் துவா செய்வோம்.
மற்றவர்களுக்கு உதவுவதை அல்லாஹ் கூறுகிறான்.
”தனது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஓர் தானியம் அது ஏழு கதிர்களை முளைக்க செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்கு கொடுக்கிறான். அவனே தரளமானவன் அறிந்தவன்” – அல்-குரான்