அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எதிர்பார்ப்பு

பாபநாசம்: அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டருக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட இணைச் செயலாளர் ஹமீது சுல்தான் தஞ்சை கலெக்டர் சுப்பையனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தஞ்சை – கும்பகோணம் செல்லும் சாலையில் தினசரி தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் சாலைகளில் தொடர் விபத்தினை ஏற்படுத்தி மனிதனின் விலை மதிப்பற்ற உயிர் போய்விடுகிறது. மேலும் ஏர் ஹாரனை பயன்படுத்தி பொதுமக்களை சாலைகளில் நடக்க விடாமலும், இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல விடாமலும் தனியார் பேருந்து டிரைவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். எனவே அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்தி ஏர் ஹாரன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

No Comments

Leave a Comment