PDV GULF-யின் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்றுஉருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாயிலான கஃபாவைவலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் இலட்சோப லட்சம்ஹாஜிகள் இறை தியானத்தில் ஈடுபடுவதும் புனித ஹஜ்கடமையின் அங்கங்களாகும்.

இந்நாளில் உயிரோட்டமாக உள்ள அம்சம் தியாகமாகும். இறைவனை நம்புவதும் அவனை வணங்குவதும், அவனுக்காகஎந்தத் தியாகத்தையும் செய்வதும் முழுமையடைந்திருக்கும் இறைநம்பிக்கையின் அடையாளமாகும்.

மனிதனை கெடுக்கும் பேராசை, பொறாமை, அகங்காரம்,ஆணவம், பகைமை போன்ற பாவக்கறைகளை விட்டு மனித இதயத்தை பரிசுத்தப்படுத்துவதற்கு பெயர்தான் குர்பானி.

வன்முறை பெருகி, வரம்புகளற்ற வாழ்க்கையால் விளையும்சமூகக் கேடுகளை புறந்தள்ளி, மானிட நேய மாண்புக்குரியமரபுகளையும், நல்லிணக்க கடமைகளையும் நிலை நிறுத்துவதற்கு தியாகம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின்கடமையாகும். இத்தியாகத்திருநாளில் அனைவரும் நலமுடனும் வளமுடனும்,ஒற்றுமை உணர்வுடனும் வாழ்வதற்கு பாடுபட சூளுரைப்போம்.

ஒப்பற்ற அந்த ஓரிறையின் அருளுக்காக காத்திருக்கும் பண்டாரவாடை மக்களுக்கும் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் எம் இதயப்பூர்வமான தியாகத் திருநாள் வாழ்த்துக்களையும் பிரார்த்தனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈத் முபாரக்.

அன்புடன்.
தலைவர் & செயலாளர்,
தலைமையகம்
ஐக்கிய அரபு அமீரகம்.

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment