கொய்யாப்பழம் மருத்துவக் குணங்கள்:

நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது. குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.

கொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்=76%
மாவுப்பொருள்=15%
புரதம்=1.5%
கொழுப்பு=0.2%
கால்சியம்=0.01%
பாஸ்பரஸ்=0.04%
இரும்புச்சத்து=1 யூனிட்
வைட்டமின் C=300 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் கொய்யாப்பழச்சாறில்  உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

உடல் சூடு, மூலவியாதி குறைந்து நலம் கிட்டும்.
ஒரே நாளில் மலச்சிக்கல் நீங்கும் அருமையான கனிச்சாறு. நீரிழிவுப் பிணியாளர்களும் சாப்பிடக் கூடிய கனி. குடல் புண்ணைக் குணப்படுத்தும்.
அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் விலகும்.
கண் கோளாறுகள் விலகி, தோல் மினுமினுப்பு தரும்.
தொப்பையைக் குறைக்கும்.

No Comments

Leave a Comment