வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்-இன்று முதல் அக்., 31 வரை

தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி- பண்டாரவாடை மக்கள் கீழ் காணும் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமான அனைத்தையும், பண்டாரவாடை கிராம நிர்வாக அலுவலகம், வாக்கு சாவடிகளான பண்டாரவாடை கிரஸண்ட் மேல்நிலை பள்ளி, ஊராட்சி ஒன்றிய கிழக்கு பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி -சூபி நகர் ஆகிய இடங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலில், திருத்தங்களை கண்காணிக்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. வரும், 2014 ஜன.,1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியாவோர், பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இதற்காக, இன்று முதல், அக்., 31 வரை, விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகளில், 44 லட்சம் மாணவர்கள், 18 வயதில் உள்ளனர். இவர்களில், 2.5 சதவீதத்தினர் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். எஞ்சியவர்களையும் சேர்க்கும் முயற்சியில், தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இதற்காக, ஒவ்வொரு கல்லூரியிலும், பேராசிரியர், இரண்டு மாணவ பிரதிநிதிகளை நியமித்து, முழு அளவில், பட்டியலில் சேர்க்கப்படுவர். இதன்படி, 2014 ஜன., 6ம்தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதற்கான உத்தரவை, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பிறப்பித்துள்ளார்.

No Comments

Leave a Comment