EXPO 2020-புதிய பாதை! புதிய எதிர்காலம்!

உலகின் தலைசிறந்த கட்டிடங்கள்,கலை,கலாசாரம் என அனைத்திலும் அரேபிய சாம்ராட்ஜியத்தில் ஒரு மைல் கல்லாய் உலவும் துபாய் நகரம்,மேலும் ஒரு அத்தியாயத்தில் தடம் பதிக்க உள்ளது.

1871 முதல் நடைபெறும் எக்ஸ்போ என்ற உலகம் ஒரு நகரில் என்ற நிகழ்வு லண்டன் முதல் 2015 இத்தாலி,2017 அஸ்டன  வரை நடைபெற்று வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக வரும் 2020 யில் ஐக்கிய அரபு அமீரகம்-துபாய் நகரில் நடைபெறும் என்று இன்று 27-11-2013 மாலை  உலக 165 நாடுகளில் 163 நாடுகள் பங்குவகித்ததில் துர்க்கி,பிரேசில் நாடுகள் தகுதி இழந்து 116 வாக்குகள் பெற்று துபாய் அசுர வெற்றி பெற்றுள்ளது.

இறுதி சுற்று வரை துபையை பின் தொடர்ந்த ரஷ்யா 47 வாக்குகள் பெற்றது.இதனை எக்ஸ்போ நிகழ்வுகளின் ஆய்வு குழுவான (Bureau International des Expositions) அறிவித்துள்ளது.

இக்குழு ஆய்விற்கு சென்ற ஷேக் அஹ்மத் பின் நஹ்யான், ரீம் அல் ஹாஷிமி, உள்ளிட்டவர்கள் “துபாய் சர்வதேச போக்குவரத்தின் மையமாக உள்ளது,எக்ஸ்போ நடத்த வேண்டிய அனைத்து வளமும் ஆற்றலும் துபைக்கு நிறைந்து இருக்கிறது,வாய்ப்பை வழங்கினால் சிறந்த முன்மாதிரி எக்ஸ்போ நிகழ்வை நடத்த உள்ளோம்” என்ற உரை ஆய்வுக் குழுவை மகிழ்வில் ஆழ்த்தியது.

இந்த எக்ஸ்போ நிகழ்வை துபாய் 250 பில்லியன் பவுண்ட்ஸ் செலவில்,25 மில்லியன் மக்கள் பங்குபெறும் விதத்தில்,22,77,149 வேலைவாய்புகள் என அளப்பெரும் திட்டங்களோடு 2013-2021 வரை செயல்ப்படுத்த உள்ளது.

எக்ஸ்போ 2020 புதிய பாதையாய் இருந்தாலும் நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கு பெரும் செலவின ஏற்றம் என்ற அச்சம் இருந்து வருகிறது.

புதிய பாதைகள் நடுத்தர வர்க்கம் பயன்படும் விதத்தில் புதிய எதிர்காலம் வகுத்தால் சரி.

No Comments

Leave a Comment