தமிழகத்தில் மீண்டும் மின் தடை!

காற்றாலை மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின் தடை அமல்படுத்த்ப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக காற்றாலையில் இருந்து கிடைத்து வந்த மின் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. மேலும், தீபாவளி  பண்டிகையின் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கான மின் நுகர்வும் அதிகரித்து விட்டது. இதனால், சென்னையில் 45 நிமிடங்கள், நகர்புறங்களில் 2 மணி நேரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 மணி நேரம் என கடந்த இரு தினங்களாக மின் தடை அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து, மின் வாரியத்துறையினரிடம் கேட்ட போது, காற்றாலைகளின் மூலம் கிடைத்து வந்த மின் உற்பத்தி கடந்த சில தினங்களாக கால் பங்கிற்கும் கீழாக குறைந்து விட்டது. நெல்லை மண்டலத்தில் மின் உற்பத்தி ’0′ ஆகி விட்டது. தமிழகத்தின் பிற மண்டலங்களிலும் காற்றாலை மின் உற்பத்தி மிகக் குறைவாகவே உள்ளது” என்கின்றனர்.

மின் வெட்டு மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

No Comments

Leave a Comment