துபாயில் புதிய விமான நிலையம்

துபாய்: உலகின் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான அல்-மஹ்தூம் சர்வதேச விமான நிலையம் துபாயில் திறக்கப்பட்டுள்ளது.

இது உலகிலேயே இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். நேற்று முதல் செயல்படத் துவங்கிய இவ்விமான நிலையத்தில் முதன் முதலாக புதாபெஸ்டிலிருந்து  விஸ் ஏர் விமானத்திற்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

துபாயிலிருக்கும் ‘ஜெபல் அலி’ என்ற  தொழில் மண்டலத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இவ்விமான நிலையத்தில் வருடத்திற்கு 16 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையிலான வசதிகள் உண்டு. மேலும், வருடத்திற்கு 1.2 கோடி டன் சரக்குகளையும் இங்கு கையாள முடியும்.

இது குறித்து, துபாய் சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல்-மஹ்தூம் தெரிவிக்கையில், “புதிய விமான நிலையம் பல்வேறு வகையில் பயனளிக்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. துபாயின் எதிர்கால வர்த்தக தேவைக்கு இவ்விமான நிலையம் கை கொடுக்கும்” என்று கூறினார்.

No Comments

Leave a Comment