வந்துவிட்டது SMS மணியார்டர்-2 நிமிடத்தில் பணம் பெறலாம்

இன்றுமுதல் செல்பேசி குறுஞ்செய்தி வழியே பண அஞ்சல் செய்து இரண்டே நிமிடத்தில் பணம் பெறும் நவீன வழிமுறையை தபால்-தந்தி அலுவலகம் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

முன்பெல்லாம், தபால் நிலையங்களின் வழியே மணி ஆர்டர் என்னும் பண அஞ்சல் அனுப்பினால் ஓரிரு நாள்களுக்குப் பின்னரே அவை உரியவருக்குக் கைக்குக் கிடைக்கும். தகவல் தொழிற்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இந்த மணி ஆர்டர் (பண அஞ்சல்) முறைக்கு அதிக வரவேற்பு இல்லாமல் இருந்தது. தற்போது பணம் அனுப்பிய இரண்டே நிமிடத்தில் அதற்குரியவர் அதைப் பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறை ஒன்றை தபால் தந்தி துறை அறிமுகப்படுத்துகிறது.

இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பணம் பெற வேண்டிய ஆள், தனக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, அந்த குறுஞ்செய்தியைக் காட்டி பண அஞ்சலில் அனுப்பிய தொகையை ப் பெற்று கொள்ளலாம். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த குறுஞ்செய்தி பண அஞ்சல் வழி மூலம் அனுப்பலாம் என்றும் இந்த முறை இன்று (நவம்பர் 16, 2013) சனிக்கிழமை முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது என்றும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

No Comments

Leave a Comment