எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24–ந்தேதி முதல் ஜூலை 1–ந்தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சிறப்பு துணைத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ–மாணவிகளுக்கு ஜூன் 24–ந்தேதி முதல் ஜூலை 1–ந்தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள்தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) சென்று, அதில்வழங்கப்பட்டு உள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை பதிவுசெய்யவேண்டும். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை பள்ளி மாணவராக அல்லது தனித்தேர்வராக எழுதி இருந்தவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத தகுதி உடையவர் ஆவர். தேர்வில் தேர்ச்சிபெறாத, தேர்வுக்கு வருகை தராத அனைத்து பாடங்களையும் உடனடி தேர்வில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

செய்முறைத்தேர்வு

அறிவியல் பாடம் தவிர இதர பாடங்களில் தேர்வு எழுத நீதிமன்றம் அல்லது மாவட்ட கலெக்டரின் ஆணையின்படி அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு பதிவுசெய்துகொள்ள உடனடியாக மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டும். அவர்கள் ஜூன் மாதம் நடைபெற உள்ள உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறாத, வருகை புரியாத அனைத்து பாடத்திற்கும் தேர்வு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானில் குறிப்பிட்டுள்ள தொகையை பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் ‘‘அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை–6’’ என்ற பெயரில் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

கடைசி நாள்

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள 10 இலக்க விண்ணப்ப எண்ணை மாணவர்கள் தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தித்தான் எந்த ஒரு சந்தேகங்களுக்கும் தேர்வுத்துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது ஹால் டிக்கெட்டை பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளுமறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறப்பு துணைத்தேர்வுக்க ஜூன் மாதம் 3–ந்தேதி முதல் 5–ந்தேதி மதியம் 12 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பத்தையும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான பாரத ஸ்டேட் வங்கி செலானையும் ஜூன் 5–ந்தேதி நண்பகல் 12 மணி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வு கட்டணத்தை செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த கடைசி நாள் ஜூன் 6–ந்தேதி (வியாழக்கிழமை) ஆகும்.

எங்கு ஒப்படைக்க வேண்டும்?

பள்ளி மாணவர்கள் உடனடி தேர்வுக்கு விண்ணப்பித்த ஆன்லைன் விண்ணப்பத்தையும், தேர்வுக்கட்டணம் செலுத்தியை வங்கிச்செலானையும், பதிவிறக்கம்செய்யப்பட்ட மதிப்பெண் விவரப்பட்டியலையும் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஜூன் 6–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தனித்தேர்வராக தேர்வு எழுதிய தேர்ச்சி பெறாதவர்கள் மேற்கூறப்பட்ட ஆவணங்களை அவர்களின் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஜூன் 10–ந்தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு துணைத்தேர்வுகள் ஜூன் 24–ந்தேதிதொடங்கி ஜூலை 1–ந்தேதி வரை நடைபெறும். இவ்வாறு வசுந்தராதேவி கூறி உள்ளார்.a

No Comments

Leave a Comment