அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மரம் வளர்போம்! மனித நலம் காப்போம்!!
“ஒரு மரம் நட்டு,அதன் கிளைகளில் பறவைகள் இளைப்பாரினாலும்,மனிதர்கள் இளைப்பாரினாலும், அதன் நன்மை மனிதருக்கு மரணத்திற்கு பின்பும் கிடைக்கிறது ” – நபிமொழி.
இன்று உலகம் முழுவதும் மனிதர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை உலக வெப்பமயமாதல்,இதன் விளைவுகள் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவால் நீர் வளமின்றி பெரிதும் பாதிக்கப்படுகின்றோம்.
இதன் காரணத்தால் பல ஊர்களில் “மரம் வளர்ப்பு திட்டம்” துவங்கி பசுமையான சூழலை உருவாக்கி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு துபாய் மண்டலத்தை மையமாக கொண்டு இயங்கிவரும் “பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின்” மூலம் நமதூர் பண்டாரவாடையின் அனைத்து தெருக்களிலும் மரம் நடும் பணிகள் இன்ஷா அல்லாஹ் 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் துவங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த உண்ணத திட்டம் சிறக்க தங்களின் மேலான ஒத்துழைப்பும்,ஆதரவும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
என்றும் மக்கள் சேவையில்…
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு
தலைமையகம்: துபாய்–ஐக்கிய அரபு அமீரகம்.
தொடர்புக்கு:+971-50-286-9411
Face book – www.facebook.com/pdvgulf Email – info@pdvgulf.com
Twitter – www.twitter.com/pdvgulf
குறிப்பு: நடப்பட்ட செடிகளுக்கோ, கூண்டுகளுக்கோ சேதம் ஏற்பட்டாலோ, (அல்லது) செடிகள் பராமரிப்பின்றி இருந்தாலோ கீழ்காணும் அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
சகோ. ஜாகிர் ஹுசைன் :9952892101 சகோ. முஹம்மது யூனுஸ் : 9659231922
சகோ. முஹம்மது மகரூப் : 9524668076
No Comments