ஆதார் கார்டுக்கான விண்ணப்ப படிவம் VAO அலுவலகத்தில் கொடுக்கப்படுகிறது.

அஸ்ஸலாமு அலைக்கும்

 பண்டாராவாடை வளைகுடா வாழ் நண்பர்களுக்கும் ஊர் ஜமாத்தார்களுக்கும் முக்கிய அறிவிப்பு. இந்திய அரசாங்க்கத்தால் வழங்கப்பட்டு கொண்டு இருக்கும் ஆதார் கார்டு (AADHAAR CARD) தற்போது ஒரு முக்கிய ஆவணமாக இருக்கின்றது.

இதற்கான புகைபடம் எடுக்கும் பணி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் புகைபடம் எடுக்க விடுப்பட்டோர் ,பாபாநாசம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சென்று எடுக்க கூடிய சூழ்நிலை இருந்துக்கொண்டு இருந்தது.

 தற்போது நமதூர் ஜமாத்தர்களின் துரித முயற்சியால், இனி நாம் நமதூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆகவே பண்டாராவாடை வளைகுடா வாழ் நண்பர்களும், ஊர் ஜமாத்தார்களும் தங்களின் உறவினர்களுக்கு இச்செய்தியை தெரியபடுத்தி பயன் பெறுமாறு அன்புடன் தெரிவித்து கொள்கின்றோம்.

No Comments

Leave a Comment