பண்டாரவாடையில் 64 வது குடியரசு தின விழா…
பண்டாவாடையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதலாவதாக பண்டாரவாடை ஊராட்சி மன்றம் சார்பில் மன்ற வளாகத்திலும் மற்றும் கல்வி சங்க சார்பில் கடைதெருவிலும் ஊராட்சி மன்ற தலைவர் கமருஜமான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
இதில் கல்வி சங்க மூத்த தலைவர் ராஜா முஹமது அவர்களும் முன்னால் கவுன்சிலர் ஹாஜா ஷெரிப் அவர்களும்,பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி அப்துல் பாசித் அவர்களும் முன்னிலை வகித்தனர்,பெரிய பள்ளிவாசல் ஸ்கிம் டிரஸ்ட் போர்டு செயலாளர் v.A முகமது பாட்சா சிறப்புரை நிகழ்த்தினார்.இதில் பலர் கலந்து கொண்டனர்.
பண்டராவாடை கிரசன்ட் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பள்ளியின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல்பெரிய பள்ளிவாசல் ஸ்கிம் டிரஸ்ட் போர்டு நிர்வாகி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
பெரிய பள்ளிவாசல் ஸ்கிம் டிரஸ்ட் போர்டு தலைவர் ஷேக் அலாவுதீன் அவர்களும் போர்டு நிர்வாகிகளும்,தலைமை ஆசிரியர் அவர்களும் முன்னிலை வகித்தனர்.,பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி அப்துல் பாசித் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதன் பின் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்,குடியரசு தின சொற்பொழிவுகள் நடைபெற்றன.
இதில் பள்ளி மாணவ-மாணவிகள்.பெற்றோர்கள்,ஆசிரிய பெருமக்கள்,ஜமாஅத்தார்கள் பலர் கலந்து கொண்டனர்.
No Comments