அண்ணல் காந்தியை ஏன் கொன்றார்கள் தெரியுமா?

 ஜனவரி 30!

சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினம் 1948, ஜனவரி 30!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி வீரர் காந்தி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தால் படுகொலை செய்யப்பட்டநாள்!

ஜனவரி 26 – குடியரசு தினம், ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் என படுவிமர்சையாக நாம் நினைவுகூர்தலுக்குக் காரணமானவர் படுகொலை செய்யப்பட்ட தினமான இன்றைய நாளை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்? மறக்கடிக்கப்படும் வரலாற்றில், மக்கள் மனதிலிருந்து காந்தியின் படுகொலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்படுவதன் பின்னணியில் அவர் எதற்காக படுகொலை செய்யப்பட்டார் என்ற மிகப்பெரியதொரு உண்மையும் சேர்த்தே மறக்கடிக்கப்படுகிறது!

இந்நாட்டின்மீது பற்றுகொண்ட ஒவ்வொருவரும் நாடும் நாட்டு மக்களும் அமைதியுடன் சுபிட்சமாக வாழ வேண்டும் என மனதார விரும்பும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் “காந்தி ஏன் கொல்லப்பட்டார்?” என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலை மனதில் பசுமையுடன் கொண்டு நடக்க வேண்டும்!

ஆம்! காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

ஒற்றை வரியில் கூறினால் இப்படி பதில் கூறலாம்:

“இந்தியாவை இந்துத்துவ நாடாக அறிவிப்பதற்கு எதிராக இருந்ததால் காந்தி கொல்லப்பட்டார்!”

எல்லா மத மக்களும் வாகாந்தி ஏன் கொல்லப்பட்டார்?ழ்வதற்கான களமாக, இந்தியா ஒரு மதச்சார்பற்ற மக்கள் குடியரசாக ஆக வேண்டுமென பாடுபட்டதற்காக அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்!

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவை இந்துத்துவ நாடாக ஆக்கும் நோக்கில் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக காந்தி தம் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லா வகையிலும் முயற்சி செய்தார். ஆனால் அதன் பலன் பெரிய அளவில் விளையவில்லை. எனவே, இந்து-முஸ்லிம் கலவரங்கள் முடியும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

அவரின் இந்த அறிவிப்பே கோட்சேயின் குண்டுக்கு அவரை இரையாக்கியது!

அவரின் உண்ணாவிரத அறிவிப்பைத் தொடர்ந்து அரசு இயந்திரங்களிலிருந்து மக்கள் வரை அனைவரும் விழித்துக் கொண்டனர். கலவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வர ஆரம்பித்தன.

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?முஸ்லிம்களைக் கருவறுத்து இந்தியாவிலிருந்து அவர்களை முழுவதுமாக விரட்டியடிக்கும் தம் திட்டம் படுதோல்வியடைவதைக் கண்முன் கண்டு பொறுக்கமுடியாத காவி பயங்கரவாதக்கூட்டம், சுதந்திரத்திற்கு முன்னரிலிருந்தே இந்தியாவை இந்துத்துவநாடாக்குவதற்கு எதிராகவே செயல்பட்டு வரும் காந்தி இனிமேலும் உயிருடன் இருந்தால் தம் திட்டம் ஒருபோதும் நடக்காது என்பதை உணர்ந்தே அவரைப் படுகொலை செய்தது!

அவரைக் கொலை செய்த அடுத்த நொடியிலேயே அவரின் படுகொலையைக் கூட தம் திட்டத்துக்குச் சாதகமாக முஸ்லிம்களைக் கருவறுக்கும் நோக்கில், “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்” என்ற புரளியைக் கிளப்பிவிட்டுத் தொடர முயற்சித்தது!

நாட்டின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசிய வானொலியில், “காந்தியைக் கொன்றது ஒரு இந்து” என்று அறிவித்ததைத் தொடர்ந்தே அவர்களின் அத்திட்டமும் முறியடிக்கப்பட்டது!

ஆக, நாட்டில் நடக்கும் இந்து-முஸ்லிம் கலவரங்களின் பின்னணி என்ன என்பதற்கான விளக்கத்தை “காந்தி படுகொலை” செய்யப்பட்டதற்கான காரணத்தின் பதிலிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்!

ஆகவே, “காந்தி ஏன் கொல்லப்பட்டார்?” என்ற கேள்வி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக நிலைகொள்ள வேண்டியது இந்திய திருநாட்டின் நிலைநிற்பிற்கான அவசியமாகவும் ஆகிறது!

No Comments

Leave a Comment