துபைக்கு வரும் வெளிநாட்டவர்களில் இந்தியா முதலிடம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய மாகாணமான துபைக்கு வரும் வெளிநாட்டவர்களில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து துபை விமானப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலிருந்து கடந்த ஆண்டு 84,01,253 பயணிகள் துபாய் வந்துள்ளனர். இது 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.3 சதவீத வளர்ச்சியாகும். இதை தொடர்ந்து 50,99,843 பயணிகளுடன் பிரிட்டன் இரண்டாவது இடத்திலும், 48,25,114 பயணிகளுடன் சவூதி அரேபியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. கடந்தஆண்டில் மட்டும் 66,431,533 வெளிநாட்டுப் பயணிகள் துபாய் வந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துபாய்சர்வதேச விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி பவுல் கிரிஃப்பித்ஸ்கூறுகையில், “விமான போக்குவரத்து துறையில் கடந்த ஆண்டு சிறப்பு மிக்கவளர்ச்சியை துபாய் எட்டியுள்ளது. 2014ஆம் ஆண்டும் அதேபோல் அமையும் எனஎதிர்பார்க்கிறோம்” என்றார்.

No Comments

Leave a Comment