சென்னை:சில்லரை தட்டுபாட்டை ஒழிக்க சில்லரை வழங்கும் ATM

சில்லறை தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் நாணயம் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை சென்னை நகரில் நிறுவப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதக்கத்துல்லாஹ் செய்தியாளர்களிடம் பேசும் போது, “மக்களிடம் சில்லறை தடையில்லாமல் கிடைக்க வேண்டி, சென்னை மாநகரின் 65 இடங்களில் CVM  எனப்படும் நாணயம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களில் 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் தாள்களைச் செலுத்தி,   1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை பயன்படுத்த இயலாது.  500 ரூபாய்க்கு நாணயம் தேவையென்றால் 5 நூறு ரூபாய்களை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி,  பாங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டி.என்.எஸ்.சி வங்கி மற்றும் ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி ஆகியவற்றின் சார்பில் சென்னையில் 65 இடங்களில் நாணயம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No Comments

Leave a Comment