பிளஸ்-2 தேர்வு எழுதுவோருக்கு புதிய விடைத்தாள் அறிமுகம்

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர் களுக்கு 38 பக்கங்களு டன் கூடிய புதிய விடைத் தாள் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

விடைத்தாள்

தமிழகம் முழுவதும் வருகிற மார்ச் 3-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் தேர்வு எண்ணை மாற்றி எழு துவதாலும், தேர்வு எழு தும் போது அவசரத்தில் சில விடைத்தாள்களை சேர்க்கா மல் விட்டு விடுவதாலும் பல்வேறு குளறுபடிகள் ஏற் படுகிறது. இதை தவிக்க இந்த ஆண்டு விடைத்தாளில் மாற் றம் கொண்டு வரப்பட்டுள் ளது.

இதன்படி ஒவ்வொரு மாணவனுக்கு 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங் கப்படும். அதன் முன் பக்கத் தில் மாணவனின் புகைப்ப டம், தேர்வு எண், பாடம், தேதி ஆகியவை குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் வரலாறு மற்றும் கணிதம் பாடங்க ளுக்கு வரைபடத்துடன் கூடிய விடைத்தாளும், உயி ரியல் பாடத்துக்கு 52 பக்கத் துடன் கூடிய விடைத்தாளும் வழங்கப்படும்.

பணிகள்

இந்த புதிய முறையினால் ஆள்மாறாட்டம் செய்யவோ, மாணவர்கள் தவறான எண் களை எழுதுவதற்கோ வாய்ப் பில்லை. மேலும் தேர்வு எழு தும் மாணவர்கள் அடிக்கடி எழுந்து விடைத்தாள் கேட் கும் நேரமும் மிச்சப்படுகிறது. தற்போது பரமக்குடியில் உள்ள அனைத்து மேல்நி லைப் பள்ளிகளிலும் புதிய விடைத் தாள் தைக்கும் பணிகள் தீவி ரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தனியாக ஆசிரியர் கள் நியமிக்கப்பட்டு பணி களை மேற்கொண்டு வருகின் றனர்.

No Comments

Leave a Comment