திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் மார்ச் 1ம் தேதி பாஸ்போர்ட் அதாலத்

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான பாஸ்போர்ட் அதாலத் மார்ச் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் எளிதாக பாஸ்போர்ட் பெறும் வகையில் திருச்சி மரக்கடையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மார்ச் 1-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் அதாலத் நடைபெறுகிறது.

பாஸ்போர்ட் விவரங்களுடன் ஹஜ் விண்ணப்பங்களை அளிக்க மார்ச் 15-ம் தேதியை கடைசி நாளாக ஹஜ் கமிட்டி அறிவித்துள்ள நிலையில், இந்த அதாலத் நடத்தப்படுகிறது.

ஹஜ் செல்வதற்காக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து, காவல்துறை விசாரணை முடிந்தும் இதுவரை பாஸ்போர்ட் பெறாதவர்கள் அதாலத்தில் பங்கேற்கலாம்.

இந்த அதாலத்தில் பங்கேற்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தற்கான படிவத்தை (ஏஆர்என் சீட்டு) எடுத்து வர வேண்டும்.

சிறப்பு உதவி மையம்: திருச்சி மரக்கடை அலுவலகத்தில் மார்ச் 15-ம் தேதி சிறப்பு ஹஜ் உதவி மையம் செயல்படும். பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், தகுதி விசாரணை நிலை, குறைகள் போன்றவை குறித்து இந்த மையத்தில் அறிந்து கொள்ளலாம் என அவர் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No Comments

Leave a Comment