ஏப்ரல் 24 யில் MP தேர்தல்! மார்ச்-9-வாக்காளர் பட்டியலில் சரி பார்க்க கடைசி நாள்!

2014 ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை 81 கோடியே 45 லட்சம் ஆகும். கடந்த 2009 தேர்தலை (71.3 கோடி) ஒப்பிடும்போது, தற்போதைய தேர்தலில் 10 கோடிக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுகின்றனர். இந்த தேர்தலில் பிற பிரிவுகளாக 28 ஆயிரத்து 314 திருநங்கைகளும், 11 ஆயிரத்து 844 வெளிநாட்டு வாக்காளர்களும், 13 லட்சத்து 28 ஆயிரத்து 621 தேர்தல் சேவை வாக்காளர்களும் வாக்களிக்கின்றனர்.

வாக்காளர்களின் இறுதி பரிசோதனைகளுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். இந்த பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பெயரை சேர்க்க இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள 9.30 லட்சம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டவர்கள், இந்த முகாமுக்கு சென்று தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

 

pdv

ஒப்புகை சீட்டு அறிமுகம்:

இந்த தேர்தலுக்காக சுமார் 17 லட்சம் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை, நாட்டிலேயே முதன் முறையாக இந்த பாராளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் பரீட்சார்த்த முறையில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 20 ஆயிரம் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.மேலும் வருகிற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் எந்த பகுதியையும் காலியாக விடவில்லை என உறுதிமொழி சமர்ப்பிக்கும் முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி வேட்பு மனுவுடன், உறுதிமொழி ஆவணத்தின் நகலையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும் வேட்புமனுவில் ஏதாவது ஒரு பகுதி நிரப்பாமல் காலியாக இருந்தால், புதிய வேட்புமனு தாக்கல் செய்யுமாறு அந்த வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்ப வேண்டும். அதன்பேரில் புதிய வேட்புமனு தாக்கல் செய்ய தவறினால், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும்.

மேற்கண்ட தகவல்களை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தெரிவித்தார்.

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment